ta.wikipedia.org

அச்சு நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Thu Mar 22 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.

அச்சு அணி நாடுகள் (Axis powers) முதலில் ரோம்-பெர்லின் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டது. [1] இது இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.

  1. Goldberg, Maren; Lotha, Gloria; Sinha, Surabhi (24 March 2009). "Rome-Berlin Axis". Britannica.Com. Britannica Group, inc. Retrieved 11 February 2021.