ta.wikipedia.org

ஓம் பூரி - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Wed Oct 18 1950

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓம் பூரி
Om Puri

2010 டொரோண்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் பூரி

பிறப்புஓம் பிரகாசு பூரி
18 அக்டோபர் 1950
அம்பாலா, அரியானா, இந்தியா
இறப்பு6 சனவரி 2017 (அகவை 66)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1972–2017
வாழ்க்கைத்
துணை
சீமா கபூர் (1991–1991)
நந்திதா பூரி (1993–2013)
பிள்ளைகள்இசான் பூரி
விருதுகள்பத்மசிறீ

சர் ஓம் பூரி (Sir Om Puri, Hindi: ओम पुरी, அக்டோபர் 18, 1950 - சனவரி 6, 2017) வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலும் மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ள ஓர் இந்திய நடிகர். இவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஓம் பூரி அரியானாவின் அம்பாலா நகரில் 1950இல் பிறந்தார். புனேயில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியிலும் பயின்றார். அங்கு இவருடன் உடன் மாணவராக நசிருதீன் ஷா பயின்றுள்ளார்.[1]

  1. Puri, Nandita (2005-01-18). "Brothers-in-arms". Mid-Day Multimedia Ltd. Archived from the original on 2005-02-28. Retrieved 2005-05-27.