ta.wikipedia.org

கென்னடி விண்வெளி மையம் - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Sun Jul 01 1962

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்

கென்னடி விண்வெளி மையத் தலைமையகத்தின் வான்பார்வை - தெற்கு நோக்கி
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 1, 1962
முன்னிருந்த அமைப்புகள்
  • ஏவுதல் செயல்பாடுகளின் ஆணையரகம்
  • ஏவுதல் செயற்பாடுகள் மையம்
ஆட்சி எல்லைஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
தலைமையகம்மெரியட் தீவு, புளோரிடா,
ஐக்கிய அமெரிக்கா
பணியாட்கள்13,100 (2011)
ஆண்டு நிதிஐஅ$350 மில்லியன் (2010)
அமைப்பு தலைமைகள்
  • ராபர்ட் டி. கபானா (Robert D. Cabana), இயக்குநர்
  • ஜேனெட் இ. பெட்ரோ (Janet E. Petro), துணை இயக்குநர்
மூல அமைப்புநாசா
வலைத்தளம்NASA KSC home page
வரைபடம்
{{{map_alt}}}

கென்னடி விண்வெளி மையம் வெள்ளையில்; கேப் கேனவரல் வான் படை நிலையம் பச்சையில்

அடிக்குறிப்புகள்
[1]

"ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்" (John F. Kennedy Space Center (KSC))  என்பது நாசா-வின் பத்து கள மையங்களுள் ஒன்றானதும் ஏவுதல் மற்றும் ஏவுசுமை முறைவழியாக்க தொகுதிகளுள் ஒன்றானதும் ஆகும்.[2] ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இதன் அருகில்தான் "கேப் கேனவரல் வான் படை நிலையம்" உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மேலாண்மையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன; வளங்கள் பங்கீடு மற்றும் மற்றவற்றின் நிலப்பகுதியில் தமது கட்டிடம் மற்றும் ஆய்வகங்கள் அமைத்தல் என ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

திசம்பர் 1968-ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் மானிட விண்பயணங்களுக்கு கென்னடி விண்வெளி மையமே நாசாவின் முதன்மையான ஏவுதளமாக செயல்பட்டு வருகிறது. அப்போலோ, ஸ்கைலேப் மற்றும் விண்ணோடத் திட்டங்களுக்கான ஏவுதல்கள் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதொகுதி-39-இல் நிகழ்த்தப்பெற்றன;  அவ்வித ஏவுதல்களின் மேலாண்மையும் கென்னடி விண்வெளி மையத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகால அப்போலோ பறத்தல்கள், மற்றும் அனைத்து மெர்க்குரி திட்டம், ஜெமினி திட்ட பறத்தல்களும் கேப் கேனவரெல் வான்படை நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய ஏவுதல்கள் அனைத்தும் கென்னடி விண்வெளி மையம் மற்றும் அதற்கு முந்தைய அமைப்பான ஏவுதல் செயல்பாடுகள் ஆணையரகத்தால் நிர்வகிக்கப்பட்டன.[3][4] ஜெமினி திட்டத்தின் நான்காவது ஏவுதலிலிருந்து புளோரிடாவின் நாசா ஏவுதல் கட்டுப்பாட்டு மையமானது, ஏவுதல் நிகழ்த்தப்பட்டவுடன் ஏவூர்தி கட்டுப்பாட்டை ஹூஸ்டனின் திட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றியளித்துவருகிறது; அதற்கு முன்னர் திட்டத்தின் முழுமையான பறத்தல் கட்டுப்பாடும் புளோரிடா கட்டுப்பாட்டு மையத்திடமே இருந்துவந்தது.[5][6]

1999-இல் "வாகன ஒருங்குசேர்ப்பு கட்டிடம்" (நடுவில்) - அதன் வலது புறத்தில் "ஏவுதல் கட்டுப்பாட்டு மையம்" சற்றே வெளியே தெரிகிறது. தூரத்தில் ஏவுதிடல்கள் ஏ மற்றும் பி.
  1. "Kennedy Business Report" (PDF). Annual Report FY2010. NASA. பெப்பிரவரி 2011. Retrieved ஆகத்து 22, 2011.
  2. "Kennedy Space Center Implementing NASA's Strategies" (PDF). NASA. 2000. Retrieved நவம்பர் 5, 2015.
  3. "APPENDIX 10 - GOVERNMENT ORGANIZATIONS SUPPORTING PROJECT MERCURY". NASA History Program Office. NASA. Retrieved நவம்பர் 6, 2015.
  4. "2. PROJECT SUPPORT FROM THE NASA Centers". MERCURY PROJECT SUMMARY (NASA SP-45). NASA. Retrieved நவம்பர் 6, 2015.
  5. "Mercury Mission Control". NASA. Retrieved நவம்பர் 6, 2015.
  6. Lipartito, Kenneth; Butler, Orville (2007). 'A History of the Kennedy Space Center. University Press of Florida. ISBN 978-0-8130-3069-2.
  • லிபார்டிடோ, கென்னெத் மற்றும் பட்லர், ஆர்வில்.ஆர். "கென்னடி விண்வெளி மையத்தின் வரலாறு (2007)" (A History of the Kennedy Space Center)
  •  This article incorporates public domain material from websites or documents of the National Aeronautics and Space Administration.