ta.wikipedia.org

சிவராம் ராஜகுரு - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Mon Mar 23 1931

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(சிவராம் ராஜ்குரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்

சிவராம் ராஜகுரு

பிறப்பு24 ஆகஸ்டு 1908
ராஜ்குருநகர், புனே, மகாராஷ்டிரம், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 மார்ச்சு 1931 (அகவை 22)
லாகூர், பிரித்தானிய இந்தியா,
(தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம்)
அமைப்பு(கள்)நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலைப் போராட்டம்

சிவராம் ஹரி ராஜகுரு அல்லது ராஜகுரு (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), பகத் சிங், சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து, பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 1928ஆம் ஆண்டில் லாகூரில், பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், பகத் சிங், சுக்தேவ் ஆகியோர் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்கிலிடப்பட்டனர்.[1][2][3]

லாலா லஜபதி ராயை பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர்.

காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, அவர்களுக்கு மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மூவரின் உடல்கள் பஞ்சாப், பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் ஆற்றங்கரையில் உள்ள உசைனிவாலா என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.

  • Anil Verma, Ajeya Krantikari Rajguru (2008)