தொழுகண்ணி - தமிழ் விக்கிப்பீடியா
- ️Sat Mar 05 2016
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழுகண்ணி ( Desmodium gyrans, Telegraph Plant, Semaphore plant or dancing grass ) என்பது கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இதன் இலை பார்ப்பதற்குச் சனப்ப இலை போல இருக்கும், இதைத் தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும். ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லிச் செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது. சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.
அழுகண்ணி போலவே இக் காயகற்ப மூலிகையையும் முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[1][2]
- Die Telegraphenpflanze பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Botanische Gärten der Universität Bonn