ta.wikipedia.org

நிலைத்த இறக்கை வானூர்தி - தமிழ் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு போயிங் 737 விமானம் - ஒரு நிலைத்த இறக்கை வானூர்தியின் உதாரணம்

நிலைத்த இறக்கை வானூர்தி (Fixed-wing aircraft) என்பது நிலையாகப் பொருத்தப்பட்ட இறக்கைகளுடன் கூடிய வானூர்தி ஆகும். பொதுவாக பயணிகள், சரக்கு முதலியவற்றை ஏற்றிச் செல்லுகின்ற வானூர்திகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறக்கைகள் வளியூடாக முன்னோக்கிச் செல்லும்போது ஏற்படும் மேலுதைப்பைப் பயன்படுத்தியே இவ்விமானங்கள் பறக்கின்றன. இவ்வகை வானூர்திகளில், முன்னோக்கிச் செல்வதற்குத் தாரைப் பொறிகளைப் பயன்படுத்தும் வானூர்திகளும், சுழலியக்கிகளைப் பயன்படுத்தும் வானூர்திகளும் அடங்குகின்றன. ஆற்றலைப் பயன்படுத்தாத வழுக்கு வானூர்திகளும் இவ்வகையினவே.[1][2][3]

  1. "Drachen Foundation Journal Fall 2002, page 18. Two lines of evidence: analysis of leaf kiting and some cave drawings" (PDF). Archived from the original (PDF) on 23 July 2011. Retrieved 2 February 2012.
  2. Needham, Volume 4, Part 1, 127.
  3. Anon. "Kite History: A Simple History of Kiting". G-Kites. Archived from the original on 29 May 2010. Retrieved 20 June 2010.