பழங்களின் பல்வகைமை - தமிழ் விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகரந்தச்சேர்க்கையின் பின் பூக்களின் சூலகம் பழமாக மாறுகிறது. சூலகத்தின் சுவர் சுற்றுக்கனியமாகவும் முதிர்ந்த சூல்வித்து வித்தாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் பழங்கள் வகைப்படுத்தப்படுவது பழங்களின் பல்வகைமையாகும்.
இந்த அடிப்படையில் பழங்கள் மூன்று வகைப்படும்.
- தனிப் பழம்
- திறள் பழம்
- கூட்டுப் பழம்
தனிப்பூவிலிருந்து தோன்றும் பழங்கள் தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியத்தின் இயல்புக்கேற்ப தனிப்பழங்களை சதைப்பழம், உலர்பழம் என இருவகைப்படுத்தலாம்.
இவை தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியம் சதை கொண்டதாக அல்லது நாருள்ளதாகக் காணப்படும்.
எ.கா: தேங்காய்,மா, தக்காளி, கொய்யா, அப்பிள், தோடை, பூசணி முதலானவை
-
மாம்பழமும் அதன் குறுக்குவெட்டும்
இவை தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியம் சதைப்பற்றுக் குறைந்ததாகக் காணப்படும்.இதனால் பரம்பலடையும் போது உலர்ந்த நிலையில் காணப்படும்.
எ.கா: அவரை,வெண்டி, சோளம், கோதுமை, நெல், மரமுந்திரி, எருக்கு முதலானவை.
ஒரு தனிப் பூவிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பழங்கள் ஒன்று திரண்ட நிலையில் உருவாகுதல் திரள் பழங்கள் எனப்படும்.
எ.கா: சீதாப்பழம்,அன்னமுன்னா, ஸ்ரோபெரி, தாழை, அலறி முதலானவை
பூந்துணரிலிருந்து பழங்கள் ஒன்றிணைந்து உருவாகுதல் கூட்டுப்பழங்கள் ஆகும்.
எ.கா: அன்னாசி,பலா, ஈரப்பலா முதலானவை