பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் - தமிழ் விக்கிப்பீடியா
- ️Fri Feb 06 1665
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் | |
---|---|
![]() மைக்கேல் தாலின் ஓவியம், 1705 | |
இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசி, இசுக்காட்லாந்தின் அரசி | |
ஆட்சிக்காலம் | 8 மார்ச் 1702 – 1 மே 1707 |
முடிசூடல் | 23 ஏப்ரல் 1702 |
முன்னையவர் | வில்லியம் III |
பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் அரசி | |
ஆட்சிக்காலம் | 1 மே 1707 – 1 ஆகத்து 1714 |
பின்னையவர் | முதலாம் ஜார்ஜ் |
பிறப்பு | 6 பெப்ரவரி 1665 புனித யேம்சு அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் |
இறப்பு | 1 ஆகத்து 1714 (அகவை 49) கென்சிங்டன் அரண்மனை, மிடில்செக்சு |
புதைத்த இடம் | 24 ஆகத்து 1714 |
துணைவர் | டென்மார்க்கின் இளவரசர் ஜார்ஜ் |
குழந்தைகளின் #Pregnancies | இளவரசர் வில்லியம் |
மரபு | இசுட்டூவர்ட்டு அரச குடும்பம் |
தந்தை | யேம்சு II & VII |
தாய் | ஆன் ஐடு |
மதம் | இங்கிலாந்து திருச்சபை |
கையொப்பம் | ![]() |
ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.

இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார்.[1][2] 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.
1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார்.
1714 ஆகஸ்டு 1 காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.[3][4]
- ↑ இக்கட்டுரையில் உள்ள அனைத்து நாட்களும் ஆன் வாழ்ந்த நாட்களில் பெரிய பிரித்தானியாவில் பின்பற்றப்பட்ட பழைய பாணி யூலியன் நாட்காட்டியை ஒட்டியது; ஒரே விலக்கு இங்கிலாந்தின் புத்தாண்டுத் துவக்கமான 25 மார்ச்சுக்கு மாற்றாக ஆண்டுகள் 1 சனவரியில் துவங்குவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
- ↑ Gila Curtis, "The Life and Times of Queen Anne"; Weidenfeld & Nicolson, இலண்டன்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-99571-5 12 முதல் 17 வரை பக்கங்கள்
- ↑ Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09024-2 பக்கம் 4
- ↑ Anne Somerset (2012)."Queen Anne: The Politics of Passion". London: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-720376-5 ; പേജ് 394
- ↑ Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09024-2 பக்கம் 528
- தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியில் ஆன் என்ற கட்டுரை உள்ளது.