ta.wikipedia.org

அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா

அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(பெரோசா கோட்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்புது டில்லி
உருவாக்கம்1883
இருக்கைகள்48,000
முடிவுகளின் பெயர்கள்
அரங்க முனை
பவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு10 - 14 நவம்பர் 1948:
 இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒநாப15 செப்டம்பர் 1982:
 இந்தியா இலங்கை
முதல் இ20ப23 மே 2016:
 ஆப்கானித்தான் இங்கிலாந்து
27 டிசம்பர் 2010 இல் உள்ள தரவு

அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.[2] பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்றே அழைக்கப்படும் என்றும் டிடிசிஏ விளக்கமளித்தது.

  • 2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
  • 7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர்.
  • 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார்.

உலகக்கிண்ணப் போட்டிகள்

[தொகு]

24 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)


28 பெப்ரவரி, 2011
14:30 (ப/இ)


7 மார்ச் 2011
14:30 (ப/இ)


9 மார்ச் 2011
14:30 (ப/இ)