ta.wikipedia.org

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Sun Feb 03 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Expressway 6
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை
மத்திய இணைப்பு

North–South Expressway Central Link
Lebuhraya Utara–Selatan Hubungan Tengah
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலை நிறுவனம்
PLUS Expressways
நீளம்:63 km (39 mi)
பயன்பாட்டு
காலம்:
1994 (இன்று வரையில்) –
வரலாறு:1996-இல் முடிக்கப்பட்டது; 2000-இல் புத்ராஜெயா இணைப்பு
முக்கிய சந்திப்புகள்
வட மேற்கு முடிவு:E1 புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை - சா ஆலாம், சிலாங்கூர்
  கத்ரி பெருவழி விரைவுச்சாலை
சா ஆலாம் விரைவுச்சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை
26 KLIA விரைவுச்சாலை
29 புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை
தென்கிழக்கு முடிவு:E2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு பாதை - நீலாய், நெகிரி செம்பிலான்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
சா ஆலாம், பத்து தீகா, UEP சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பூச்சோங், பண்டார் சௌஜானா புத்ரா, சைபர்ஜெயா, புத்ராஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், டெங்கில், நீலாய்
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana scripts' not found.

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு அல்லது மத்திய இணைப்பு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway Central Link; மலாய்: Lebuhraya Utara–Selatan Hubungan Tengah) என்பது மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் (ELITE) எனும் பெயரும் உண்டு.

இந்த விரைவுச்சாலை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சா ஆலாம் நகருக்கும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் நகருக்கும் இடையே செல்கிறது.[1]

இந்த விரைவுச் சாலையானது; புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கான முதன்மை அணுகல் பாதையாகவும் செயல்படுகிறது.[2]

வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) எனும் மலேசியாவின் பிரதான விரைவுச்சாலையில் இரு பிரிவுகள் உள்ளன.

இந்த இரு பிரிவுகளையும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை இணைத்துச் செல்கிறது. அந்த வகையில் மாநிலங்களைக் கடந்து (Interstate Traffic); வடக்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; தெற்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; கோலாலம்பூர் மாந்கரத்திற்குள் செல்லாமல் கடந்து செல்ல முடியும்.

வாகனங்கள் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் செல்வதைத் தவிர்ப்பதற்காகவும்; கோலாலம்பூரில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காகவும் இந்த மத்திய இணைப்பு விரைவுச்சாலை 1996-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

வடக்கு-தெற்கு விரைவுசாலைக்கான புதிய விரைவுச்சாலை (மத்திய இணைப்பு விரைவுச்சாலை) அமைப்பது பற்றி 1994-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

1994 மார்ச் மாதம் மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 1997 ஆகஸ்டு மாதம் நிறைவடைந்தது. முதல் பகுதி, சா ஆலாம் மற்றும் யூ.எஸ்.ஜே. (USJ) சுபாங் ஜெயா நகரங்களுக்கு இடையில், 1996 ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா இணைப்பு

[தொகு]

1997 அக்டோபர் மாதம், மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் எஞ்சிய பகுதி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா நகருக்கான இணைப்பு திறக்கப்பட்டது.

2013 பிப்ரவரி 28-ஆம் தேதி, மத்திய இணைப்பு விரைவுச் சாலையின், புத்ராஜெயா இணைப்பில் பண்டார் நுசா புத்ராவுக்குச் செல்லும் சந்திப்பில் முழுமை அடையாத ஒரு பாலம் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக இடிந்து விழுந்தது. உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

  • மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் நீலாய் நகரச் சந்திப்பு

    மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் நீலாய் நகரச் சந்திப்பு

  • நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லை

    நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லை

  • புத்ராஜெயா இணைப்பு

    புத்ராஜெயா இணைப்பு

  • வடக்கு நீலாய் சந்திப்பு.

    வடக்கு நீலாய் சந்திப்பு.