ta.wiktionary.org

பிரம்மசாரிணி - தமிழ் விக்சனரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரம்மசாரிணி--வட இந்திய பாணியில்

ஒலிப்பு

பிரம்மசாரிணி, .

  1. இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் ஓர் அம்சம்.
  • ஆங்கிலம்
  1. one of nine features of goddess durga--brahmacharini
  1. இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை வழிபடுகிறர்கள்...அவைகளில் ஒரு அம்சம் பிரம்மசாரிணி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் இரண்டாம் நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...
  2. இந்த தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையையும் இடக்கையில் கமண்டலத்தையும் ஏந்திக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்...இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக்கும் திறன் கிட்டும்
  3. மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் சந்திரகண்டா, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா, மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.