ஊருக்குள் வந்தால் மோதல் ஏற்படும் - எச். ராஜா வருகைக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர்
- ️@news18tamil
- ️Sun Sep 01 2019
ஊருக்குள் வந்தால் மோதல் ஏற்படும் - எச். ராஜா வருகைக்கு எதிராக கிராம மக்கள் போஸ்டர்
Last Updated:September 01, 2019 7:53 AM IST
![எச். ராஜா வருகைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் எச். ராஜா வருகைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்](https://images.news18.com/tamil/uploads/2019/08/h-raja.jpg?impolicy=website&width=415&height=270)
திட்டக்குடி அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதால், ஒரு தரப்பினர் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.
எச். ராஜா வருகைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை பிரதிஷ்டை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வருவதாக ஊர்முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது இதனை கண்டித்து இந்த கிராம மக்கள் மத ரீதியாக பிளவுபடுத்தும் ராஜா எங்கள் ஊருக்கு வரக்கூடாது என்று அனைத்து கிராம மக்களும் மற்றும் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர் இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இவர் இங்கு வந்தால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் அதனால் எச் ராஜா வரக்கூடாது என்று கிராம மக்கள் கடுமையாக தெரிவித்துள்ளனர்
இந்நிலையில்,அவருக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்த நிலையில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர்.
பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா
மீறி எச்.ராஜா இந்த ஊருக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என்று ஊர்மக்கள் எச்சரித்துள்ளனர்
First Published :
September 01, 2019 7:40 AM IST